Indian laws and acts pdf in tamil

100 சட்ட புத்தகங்கள் தமிழில் வெளியீடு

100 சட்ட புத்தகங்கள் தமிழில் வெளியீடு

ADDED : ஜூலை 03, 2024 01:55 AM

ADDED : ஜூலை 03, 2024 01:55 AM

Google News

<a href=Latest Tamil News" width="" height="" />

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழ்நாடு மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையம் வழியாக, தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட, 100 சட்ட புத்தகங்களை, முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.

கருணாநிதி நுாற்றாண்டு விழா நிறைவையொட்டி, தமிழ்நாடு மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையம், 100 சட்டங்களை புத்தக வடிவில் வெளியிட நடவடிக்கை எடுத்தது.

அதன்படி, 37 மைய சட்டங்கள்; 63 தமிழ்நாடு சட்டங்களில், 43 மறுமதிப்பு செய்யப்பட்ட சட்டங்கள், 20 புதிய பதிப்பு செய்யப்பட்ட சட்டங்கள் என, 100 சட்ட புத்தகங்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டன.

மொத்தம், 100 சட்ட புத்தகங்களை, நேற்று தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இவற்றை தமிழக அரசின் www.tn.gov.in இணையதளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

புத்தகங்கள் வெளியீடு நிகழ்ச்சியில், அமைச்சர் ரகுபதி, தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, சட்டத்துறை செயலர் ஜார்ஜ் அலெக்சாண்டர், மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் தலைவர் தாரணி மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.